காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில்.

காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரோனா தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 5 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று முதல் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் செப்.7-ம் தேதியில் இருந்து காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.

இந்த ரயில் ஏற்கனவே அதிகாலை 5.05 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டது. தற்போது அதிகாலை 4.55 மணிக்கு காரைக்குடியில் இருந்து ரயில் புறப்படுகிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது. ஐந்து மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்சசி அடைந்தனர்.

அதேபோல் ஏற்கெனவே ஒருநாள் இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த சென்னையில் இருந்து செங்காட்டை செல்லும் சிலம்பு ரயில், தற்போது தொடர்ந்து மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது.

செப்.10-ம் தேதி முதல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். காலை 9 மணிக்கு செங்கோட்டையை அடையும்.

அதேபோல் செப்.12-ம் தேதி முதல் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், இரவு 9.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

 

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 
தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்  வெப்பச் சலனம் காரணமாக  விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், சனிக்கிழமை இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமியைத் தவிர பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரை

 

அதிகமாகக் கடன் பெற்று, மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள். பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு வந்துவிடும்’ என, மத்திய அரசுக்கு காங்., மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய அரசை காங்., கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், அதை மீண்டும் மீட்சிப் பாதைக்குக் கொண்டுவருவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

Here are are some concrete steps to raise money:

1. Relax the FRBM norm and borrow more this year

2. Accelerate disinvestment

3. Use the offer of USD 6.5 billion by IMF, WB, ADB etc

4. As last resort, monetize part of the deficit


மத்திய அரசு பணத்தைத் திரட்டிக்கொள்ள சில வழிமுறைகளைக் கூறுகிறேன்.
இந்த ஆண்டு நிதிப் பொறுப்பையும் பட்ஜெட் மேலாண்மையையும் சற்று தளர்த்தி அதிகமாகக் கடன் பெறுங்கள். அரசு நிறுவனங்கள் மீது மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகள் விற்பதை விரைவுபடுத்துங்கள். உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவை அளிப்பதாகத் தெரிவித்துள்ள 6,500 கோடி டாலர் நிதியை பயன்படுத்துங்கள். கடைசி முயற்சியாக, பற்றாக்குறையின் ஒரு பகுதியைப் பணமாக அச்சிடுங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடவும், சந்தையில் தேவையை, நுகர்வை அதிகரிக்கவும் சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களில் 50 சதவீதம் பேருக்கு நேரடியாகப் பணத்தை வழங்கிடுங்கள். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவசமாக உணவு தானியத்தை வழங்கிடுங்கள். தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளட்டும்.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிடுவதை அதிகப்படுத்துங்கள். உணவு தானிய இருப்பைப் பயன்படுத்தி ஊதியம் வழங்கிடுங்கள். மிகப்பெரிய அளவில் பொதுப் பணிகளைத் தொடங்கிடுங்கள். வங்கிகளுக்குத் தேவையான மறு முதலீடுகளை வழங்கிடுங்கள். மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகையை வழங்குங்கள். இவை அனைத்துக்கும் பணம் தேவை. ஆகவே, கடன் பெறுங்கள். தயக்கம் காட்டாதீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது.
முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 போட்டிகளின் விவரம் வருமாறு:-
1. செப்டம்பர் 19-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை – அபு தாபி (இரவு 7.30 மணி)
2.  செப்டம்பர் 22-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)
3.  செப்டம்பர் 25-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)
4. அக்டோபர் 2-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் –  சன்ரைசர்ஸ் ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)
5. அக்டோபர் 4-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – துபாய் (இரவு 7.30 மணி)
6. அக்டோபர் 7-ந்தேதி – புதன்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)
7. அக்டோபர் 10-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – துபாய் (இரவு 7.30 மணி)
8. அக்டோபர் 13-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)
9. அக்டோபர் 17-ந்தேதி – சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)
10. அக்டோபர்  19-ந்தேதி – திங்கட்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)
11. அக்டோபர் 23-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)
12. அக்டோபர் 25-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மதியம் 3.30 மணி)
13. அக்டோபர் 29-ந்தேதி – வியாழக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)
14. நவம்பர் 1-ந்தேதி – ஞாயிற்றுக்கிழம – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – அபு தாபி (மதியம் 3.30 மணி)

ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

 

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 19ல் துவங்கும் முதல் போட்டியில், சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமீரேட்சில் செப்., 19 முதல் நவ.10 வரை நடக்க உள்ளது. 53 நாட்களில் 60 போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக யு.ஏ.இ., சென்ற அணிகள் பயிற்சியை துவக்கியுள்ளன. இதனால், தொடர் அட்டவணை எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 19ம் தேதி அபுதாபியில் துவங்கும் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. ஒரு போட்டி மட்டும் நடக்கும் நாட்களில், போட்டி, இந்திய நேரப்படி இரவு 7: 30 மணிக்கு துவங்குகிறது. இரண்டு போட்டிகள் நடக்கும் நாட்களில், முதல் போட்டி மாலை 3: 30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கும் துவங்குகிறது.

அட்டவணை

latest tamil news
latest tamil news
latest tamil news

Advertisement

பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ்

 

பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அங்கு 2-வது முறையாக பாதிப்புக்குள்ளாகும் முதல் நபர் இவர்.
இதுபற்றி பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது:
“பெங்களூருவில் முதன்முறையாக 27 வயது பெண் ஒருவர் கரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதையடுத்து, அவர் வீடு திரும்பினார். எனினும், ஒரு மாதத்துக்குப் பிறகு அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது.”

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம்

 

நிலநடுக்கம்
 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று காலை 6.36 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 2.7 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

சென்னை:

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வரும் 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் 9 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.

 நேற்று,  தெற்கு ரெயில்வே மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்- செங்கோட்டை (வண்டி எண்: 06181) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டை- எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

* எழும்பூர்- கன்னியாகுமரி (02633) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மாலை 5.15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் நாள் காலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக கன்னியாகுமரி-எழும்பூர் (02634) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மேட்டுப்பாளையம் (02671) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் இரவு 9.05 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (02672) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

* திருச்சி-நாகர்கோவில் (02627) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் காலை 6 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக நாகர்கோவில்-திருச்சி (02628) இடையே அன்று மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி  ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

5 மாதங்களுக்கு பிறகு ரெயில் செல்லவிருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் தனிமனித இடைவெளியுடன் டிக்கெட்டு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வில் தோல்வி அடைந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு 22ந்தேதி தொடங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

 சிபிஎஸ்இ

     தேர்வில் தோல்வி அடைந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு 22ந்தேதி தொடங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

சென்னை:

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்து இருக்கிறது.

அதன்படி, 10-ம் வகுப்புக்கு மறுதேர்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 12-ம் வகுப்புக்கான மறுதேர்வு 22-ந்தேதி ஆரம்பித்து, 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த 2 தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற இருக்கிறது.