Showing posts with label southern railway. Show all posts
Showing posts with label southern railway. Show all posts

காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில்.

காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரோனா தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 5 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று முதல் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் செப்.7-ம் தேதியில் இருந்து காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.

இந்த ரயில் ஏற்கனவே அதிகாலை 5.05 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டது. தற்போது அதிகாலை 4.55 மணிக்கு காரைக்குடியில் இருந்து ரயில் புறப்படுகிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது. ஐந்து மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்சசி அடைந்தனர்.

அதேபோல் ஏற்கெனவே ஒருநாள் இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த சென்னையில் இருந்து செங்காட்டை செல்லும் சிலம்பு ரயில், தற்போது தொடர்ந்து மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது.

செப்.10-ம் தேதி முதல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். காலை 9 மணிக்கு செங்கோட்டையை அடையும்.

அதேபோல் செப்.12-ம் தேதி முதல் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், இரவு 9.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்

தமிழக அரசு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

 

பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து . இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 
 
கரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகளும், மாநிலங்களுக்குள் பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். அதன்படி, முதல்கட்டமாக தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த 7 சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை-காட்பாடி, மதுரை-விழுப்புரம்-செங்கல்பட்டு சிறப்பு ரயில்கள் சென்னை வரை நீட்டிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
7-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் கிருமி நாசினி கொண்டு ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டிக்கெட் பெற வரும் பயணிகள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் 7-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 
 
ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவார்கள். பயணத்திற்கான டிக்கெட் உறுதிசெய்யப்பட்டவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். 90 நிமிடங்களுக்கு முன்பாகவே ரயில் நிலையத்துக்கு வந்து சேர வேண்டும். ரயிலில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கப்படாது. குளிர்சான பெட்டிகளில் தேவையான அளவிக்கு வெப்பநிலை ஒழுங்குப்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.