TN Temples |
இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளது. இரவு 8 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அர வெளியிட்டுள்ளது.
அதன்படி பக்தர்கள், கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னர்
* கை, கால்களை கழுவிய பின்னரே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்
* உடல் வெப்ப பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
* கோயில்களில் தனிமனித இடைவெளி கட்டாயம்
* கோயில்களில் பக்தர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம்
* காலணியை பாதுகாப்பிடத்தில் பக்தர்களே விட்டு, எடுத்து கொள்ள வேண்டும்
* கால அபிஷேகம் அர்ச்சனை, கட்டண சேவைகள் மற்றும் விழாக்களில் கூட்டமாய் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
* கோயில்களில் இருக்கும் பொருட்களை தொடக்கூடாது
* தனிமனித இடைவெளியுடன் தீபத்தை தொட்டு வணங்கி செல்லலாம்.
* அர்ச்சகர்களும், மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
*எந்த பிரசாதத்தையும் அர்ச்சகர்கள், பக்தர்களுக்கு நேரடியாக தரக்கூடாது.
* தனித்தனியே பிரசாதங்கள் இருக்கும் தட்டுகளில் இருந்து பக்தர்களே எடுத்து கொள்லாம்
* உண்டியலை தொடாமல் காணிக்கை செலுத்த வேண்டும்.
* தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களை அனுமதிக்கக்கூடாது
* மாஸ்க், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அனுமதியில்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்
* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டு தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
* நுழைவுவாயில்களில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
*கொடி மரம் உள்ளிட்ட இடங்களில் அமர்வது, விழுந்து கும்பிடுவதற்கு தடை
* பிரதான சன்னதிக்குள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
*குறியிடப்பட்ட இடத்தில் வரிசையாக நிற்க வேண்டும்
* அர்ச்சகர்கள் பக்தர்களை தொட்டு, குங்குமம், பிரசாதம் பூ வழங்க அனுமதியில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.