அக்டோபர் மாதம் கரோனா தொற்று உச்சத்துக்கு செல்லும் - தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தல்

 

அக்டோபர் மாதத்தில் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் 8-ம் கட்டமாக செப்.30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் அபாயகரமான கட்டத்தில் உள்ளோம். செப்.1-ம் தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்றின் மிகவும் மோசமான நிலை இனிமேல்தான் வர உள்ளது.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து, வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதம் கரோனா தொற்று உச்சத்துக்கு செல்லும். பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், சுய சுத்தம் இவற்றில் கவனம் செலுத்துவதை தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.

அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்கள், பணிபுரியும் இடங்கள், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன், அடிக்கடி அந்த இடங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதி மேலாண்மையில் கூடுதல் கவனம்செலுத்த வேண்டும். அரசே பரிசோதித்து, தனிமைப்படுத்தி, சிகிச்சைஅளிக்கும் நிலையை மாற்றி மக்களே வந்து பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறும் நிலையை உருவாக்க வேண்டும். தேவைப்பட்டால் கிராமப்புற, நகரப்புறங்களில் அதிக அளவில் கரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு மையங்களை உருவாக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகபரிசோதனை செய்வது, காய்ச்சல்முகாம்களை அதிக அளவில் நடத்துவது மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைக்க முடியும்.

இவ்வாறு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பட்டுக்கோட்டை-ல் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா-ல் உயிரிழந்ததவர் உள்ளுறுப்புகள் களவாடப்பட்டுள்ளதாகவும் கோரிக்கை மனு

 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நேருநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் சலீம் (42). கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாகக் கூறிய மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலைம் 29ம் தேதி காலையில் உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. பின்னர் அவரது உடல் பட்டுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், சலீம் மனைவி சர்மிளா மற்றும் அவரது குடும்பத்தினர் சலீம் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர் மேலும் அவரது உடல், உள்ளுறுப்புகள் களவாடப்பட்டுள்ளதாகவும் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் அந்தக் குடும்பத்தினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்த சலீமின் மனைவி சர்மிளா, மைத்துனர் சௌகத் ஆகியோரிடம் பட்டுக்கோட்டை அரசு மருத்துமனையில் மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராமு நேரில் விசாரணை நடத்தினார். அதேபோல் தனசேகரன் என்பவர் ஜுலை 17ஆம் தேதி இதே மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்ததாக நிர்வாகம் அறிவித்தது. அவருடைய சாவிலும் மர்மம் இருப்பதாகக் கூறி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

வேலூர்-ல் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வினியோகம் செய்ய முடிவு.

 

வேலூர்-ல்  ஒன்று முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை 3 கட்டங்களாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தேசிய குடற்புழு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயது குழந்தைகளுக்கும், அரசு பள்ளிகள், நிதியுதவி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 19 வயது உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய குடற்புழு மாத்திரை வழங்கப்படவில்லை. செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் வழங்கி முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில் தமிழகம் முழுவதும் குடற்புழு மாத்திரைகளை 3 கட்டங்களாக வழங்க சுகாதாரத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 14ம்தேதி முதல் 19ம் தேதி வரையும், 2வது கட்டமாக 21ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 28ம் தேதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி, அரசு மற்றும் நிதியுதவி, தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் அருகே அழைத்து மாத்திரை வழங்கப்படும்.இந்த மாத்திரை மூலம் குடல் புழுக்களை கட்டுப்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்தல், மன அழுத்தம், இரும்புச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோய்கள் வரும் முன்பே தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாத்திரை 400 மில்லி கிராம் கொண்டது. பள்ளிகள், வீடுகள் தோறும் நேரடியாக கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் ஈடுகின்றனர். கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து இந்த பணி நடைபெறும். இந்த மாத்திரை சாப்பிடுவதால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதை கண்டிப்பாக மாணவ, மாணவிகள் உட்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக அரசு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

 

பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து . இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 
 
கரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகளும், மாநிலங்களுக்குள் பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். அதன்படி, முதல்கட்டமாக தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த 7 சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை-காட்பாடி, மதுரை-விழுப்புரம்-செங்கல்பட்டு சிறப்பு ரயில்கள் சென்னை வரை நீட்டிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
7-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் கிருமி நாசினி கொண்டு ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டிக்கெட் பெற வரும் பயணிகள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் 7-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 
 
ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவார்கள். பயணத்திற்கான டிக்கெட் உறுதிசெய்யப்பட்டவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். 90 நிமிடங்களுக்கு முன்பாகவே ரயில் நிலையத்துக்கு வந்து சேர வேண்டும். ரயிலில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கப்படாது. குளிர்சான பெட்டிகளில் தேவையான அளவிக்கு வெப்பநிலை ஒழுங்குப்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

திருவண்ணாமலை பெரம்பலூர் - பிரதமரின் விவசாய கிசான் நிதி உதவி திட்டத்தில் கீழ் கோடி கணக்கில் மோசடி செய்த அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில்  பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் கோடி கணக்கில் பண மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து, திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டத்திலும் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, துரிஞ்சாப்புறம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட 18 ஒன்றியங்களில் கிசான் திட்டத்தின் கீழ் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில், நிலம் இல்லாத 30 ஆயிரம் பேரை முறைகேடாக சேர்த்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, 18 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதும் அம்பலமாகிருகிறது. இந்நிலையில், போலி பயனாளிகளை சேர்த்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில், 60 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலி பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதுபோன்று தொடர் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்பு..

        சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து அவர் இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். 
 
சசிகலாவுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருவமான வரித் துறை முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2017-இல் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என சுமார் 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சுமார் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ. 5.5 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, விசாரணையின் முடிவில் சசிகலா பினாமிகளின் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியது. 
 
சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதவர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் அந்த இடத்தில்  ‘பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது’  என்று வருமான வரித்துறை சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டியது. இதுதொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
 
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து அவர் இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். 
 
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாள்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே 43 மாத காலம் சிறை தண்டனை காலம்  முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாள்கள் வீதம் 129 நாள்கள் தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என்றார்.
 
மேலும் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை. வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். நான் சசிகலாவின் வழக்குரைஞராக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறையின் நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 
 
சசிகலா கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம் என்று வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். 

மேட்டூர் அணை இன்று 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை (Mettur Dam)

மேட்டூர் அணைக்கு நேற்று 17 ஆயிரத்து 937 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நட்ராம்பாளையம் மற்றும் அதையொட்டி உள்ள தருமபுரி மாவட்டம் கூத்தப்பாடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரியிலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஒனேக்கல்லில் நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று 17 ஆயிரத்து 937 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரியில் 9 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 89.50 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சுமார் 1 அடி உயர்ந்து 90.36 அடியாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரீசஸ் (Rhesus) வகை குரங்குகள் ஆராய்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது..

 

Rhesus monkey

ரீசஸ் (Rhesus) வகை குரங்குகள் ஆராய்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வகை குரங்குகள் முற்றிலும் காணாமல் போய்விட்டதாகவும் அவற்றை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பயோக்வால் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். வைரஸ் பரவலால் சோதனைக்காக இந்த வகைக் குரங்குகளின் தேவை அதிகரித்ததோடு சீனாவிலிருந்து வரும் குரங்குகளின் இறக்குமதி எண்ணிக்கையும் குறைந்துவிட்டதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 35,000 குரங்குகளில் 60% சீனாவிலிருந்து வந்தவை.  ரீசஸ்(Rhesus) வகை குரங்குகளை எப்போதும் பயோ சேஃப்டி லெவல் 3 எனப்படும் ஆய்வகங்களில் மட்டுமே வைக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் இந்த ஆய்வகங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தற்போது கைவசம் உள்ள குரங்குகளைக் கொரோனா ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி

 

ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர்: செப்டம்பர் 6-ம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அனுமதி சீட்டை நாளை முதல் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில்(www.tnhrce.gov.in) முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
ஆன்லைன் முன் பதிவின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை எனவும் தரிசனத்திற்கான அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நேரங்களில் அதனை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்களுக்கு கடற்கரையில் நீராடவும், நாழி கிணற்றில் தீர்த்தம் தெளித்தல் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்கவும் அனுமதி இல்லை. மதிய அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

பப்ஜி உள்பட 118 செல்லிடப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை - சீனா எதிர்ப்பு

 

பப்ஜி உள்பட 118 செல்லிடப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தள்ளது.
சீன வர்த்தகத் துறையின் செய்தித் தொடர்பாளர் கோ ஃபெங் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், சீன நிறுவனங்கள் மீது பாரபட்சமான கட்டுப்பாடுகளை விதித்து, இந்தியா அரசு தனது தேசிய பாதுகாப்பை தவறாகப் பயன்படுத்துகிறது. 

இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியா – சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, பல்வேறு நன்மைகளை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இளைஞா்கள் மத்தியில் பிரபலமான ‘பப்ஜி’ விளையாட்டு செயலி உள்பட சீனாவுடன் தொடா்புடைய 118 செயலிகளுக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்தது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகள் சீனாவைச் சோ்ந்தவை மற்றும் சீனாவுடன் தொடா்புடையவையாகும். தடை செய்யப்பட்ட செயலிகளில் மிகவும் பிரபலமான பப்ஜி, தென்கொரியாவைச் சோ்ந்தது என்றாலும், அதன் பெரும் பகுதி வருவாய் சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்கே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறைக்கு வித்திடும் பப்ஜி: பப்ஜி விளையாட்டில் பங்கேற்பவா்கள் கூட்டாகச் சோ்ந்து எதிா்த்து வருபவா்களை கொலை செய்வதன் மூலமே வெற்றி பெற முடியும் என்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறாா், இளைஞா்கள் மத்தியில் வன்முறை மனப்பான்மையை ஏற்படுத்துவதாகவும், பலா் இரவு, பகலாக இந்த விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை: 118 செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆன்ட்ராய்டு, ஐஎஸ்ஓ தொழில்நுட்பத்துடன்கூடிய அறிதிறன்பேசிகளில் இடம்பெற்றிருக்கும் சில செயலிகள் மூலம் அதைப் பயன்படுத்துபவா்களின் தகவல்கள், இந்தியாவுக்கு வெளியில் உள்ள அந்தச் செயலிகளின் சா்வா்களிலிருந்து திருடப்படுவதாக மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு புகாா்கள் வந்தன.

அதனடிப்படையில், பப்ஜி, பாய்டு, பாய்டு எக்ஸ்பிரஸ், டென்சென்ட் வாச்லிஸ்ட், ஃபேஸ்யு, வீசாட் ரீடிங், டென்சென்ட் வியுன் உள்பட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசத்தின் பாதுகாப்பு, மாநிலங்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்ற அடிப்படையில் இந்த செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலிகள் அனைத்தும் ஏதாவது ஒருவகையில் சீனாவுடன் தொடா்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி: சீனாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

இந்நிலையில், சீனா தொடா்புடைய செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கெனவே சீனாவைச் சோ்ந்த 106 செயலிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை விதித்தது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீனத் தரப்பில் 35-க்கும் அதிகமான வீரா்கள் உயிரிழந்தனா். எனினும், அதனை சீனா பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.

அதையடுத்து, லடாக் எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் பாதுகாப்பை வலுப்படுத்தின. அதன் காரணமாக எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியதுடன், இரு நாட்டு உறவில் இறுக்கம் ஏற்பட்டது. பதற்றத்தைத் தணிக்க தொடா்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் சீன எதிா்ப்பு மனப்போக்கு அதிகரித்தது. மேலும், சீன செயலிகள் மூலம் இந்தியா்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், இந்தியா்களைப் பயன்படுத்தி சீன நிறுவனங்கள் அதிக பொருளாதார பயனடைவதாகவும், சில செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், டிக்டாக், ஷோ் இட், யூசி பிரௌசா், கேம் ஸ்கேனா், வீசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த ஜூன் 29-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடா்ந்து ஜூலை மாதத்தில் மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதன் மூலம் சா்வதேச அளவில் மிகவும் பிரபலமான சீனாவின் டிக்-டாக், வீசாட் ஆகியவற்றுக்குத் தடை விதித்த முதல் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந்நாட்டு எம்.பி.க்கள் பலா் வரவேற்றனா். பின்னா், அமெரிக்காவும் டிக்-டாக், வீசாட் செயலிகளை தடை செய்வதாக அறிவித்தது.

இப்போது 3-ஆவது கட்டமாக சீனாவுடன் தொடா்புடைய 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் சீனா நடத்தும் அத்துமீறல்களுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் இதுபோன்ற செயலிகள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக சா்வதேச அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா தொற்று

 


சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,924 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,45,851 ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 968 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 1,38,724 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,924 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 593 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 590 பேருக்கும்தொற்று உறுதி ஆகியுள்ளது.  

தமிழகத்தில் இன்று 5,892 பேருக்குக் உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,45,851. சென்னையில் மட்டும் 1,38,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிசிஆர் பரிசோதனை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 37 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 7,85,402.

சென்னையில் 968 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,924 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

TN Temples



 

    இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளது. இரவு 8 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அர வெளியிட்டுள்ளது.

அதன்படி பக்தர்கள், கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னர் 
 
* கை, கால்களை கழுவிய பின்னரே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்
* உடல் வெப்ப பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
* கோயில்களில் தனிமனித இடைவெளி கட்டாயம்
* கோயில்களில் பக்தர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம்
* காலணியை பாதுகாப்பிடத்தில் பக்தர்களே விட்டு, எடுத்து கொள்ள வேண்டும்
* கால அபிஷேகம் அர்ச்சனை, கட்டண சேவைகள் மற்றும் விழாக்களில் கூட்டமாய் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
* கோயில்களில் இருக்கும் பொருட்களை தொடக்கூடாது
* தனிமனித இடைவெளியுடன் தீபத்தை தொட்டு வணங்கி செல்லலாம்.
* அர்ச்சகர்களும், மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
*எந்த பிரசாதத்தையும் அர்ச்சகர்கள், பக்தர்களுக்கு நேரடியாக தரக்கூடாது.
* தனித்தனியே பிரசாதங்கள் இருக்கும் தட்டுகளில் இருந்து பக்தர்களே எடுத்து கொள்லாம்
* உண்டியலை தொடாமல் காணிக்கை செலுத்த வேண்டும்.
* தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களை அனுமதிக்கக்கூடாது
* மாஸ்க், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அனுமதியில்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்
* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டு தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
* நுழைவுவாயில்களில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
*கொடி மரம் உள்ளிட்ட இடங்களில் அமர்வது, விழுந்து கும்பிடுவதற்கு தடை
* பிரதான சன்னதிக்குள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
*குறியிடப்பட்ட இடத்தில் வரிசையாக நிற்க வேண்டும்
* அர்ச்சகர்கள் பக்தர்களை தொட்டு, குங்குமம், பிரசாதம் பூ வழங்க அனுமதியில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 
 

மாவட்டத்துக்குள் மட்டும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும்

Private Bus and Govt Bus

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் மட்டும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். 
இதில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை நாளை முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும் இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29 சனிக்கிழமை தினம் மட்டும் ரூ.243 கோடியே 12 லட்சம் மதுபானங்கள் விற்பனையானது.

 

 
டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் வார நாட்களில் சராசரியாக ரூ.90 கோடி மதிப்பிலான செய்யப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் விற்பனை இரு மடங்கு நடைபெறுவது வழக்கம்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோரின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் கடந்த சனிக்கிழமையும் மது வாங்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அன்றைய தினம் மட்டும் ரூ.243 கோடியே 12 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு

 

 


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘வரும் நாட்களில் தமிழகத்தில் அதிக மழை கிடைப்பதற்கான சாதகமான வானிலை நிலவுகிறது. ராஜஸ்தான், டெல்லி வழியாக வடக்கு வங்கக் கடல் வரை செல்லும் தென்மேற்கு பருவ மழைக்குகாரணமாக விளங்கும் மைய அச்சு வரும் நாட்களில் இமயமலை அடிவாரத்தை நோக்கி நகர உள்ளது

சுங்கக்கட்டணம் உயர்வு - செப்டம்பர் 1-ந்தேதி முதல்

 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. 
இவற்றில் ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி (சேலம்), புதூர் பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), சமயபுரம் (திருச்சி), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), விஜயமங்கலம் (குமாரபாளையம்), பாளையம் (தர்மபுரி), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொராட்டாண்டி, திருமாந்துறை (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை (தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), விக்கிராவாண்டி (விழுப்புரம்), திருப்பராய்த்துறை (திருச்சி) உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் நாளை செப்டம்பர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு வழக்கமான நடை முறை தான் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பல்லாவரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு மறைமலை அடிகளின் பெயரை வைக்கும்படி கோரிக்கை

 


பல்லாவரம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது. இதனால், ஜிஎஸ்டி சாலையில் குறையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் பிரதான சாலையாக இருக்கும் ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கியமான இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பல்லாவரத்தில் ஜிஎஸ்டிசாலை, சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடி செலவில்1,038 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்படும் என்று கடந்த2012-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேம்பாலப் பணிகள் தொடங்குவதற்கே3 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அதன்பிறகு, கடந்த 2016-ம்ஆண்டில் மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்கி, படிப்படியாக நடைபெற்று வந்தன. இதற்கிடையே, ஊரடங்கால் மேம்பாலப் பணிகள் முடங்கின. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் மீண்டும் தொடங்கின. தற்போது மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது

இதுதொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரம் மேம்பாலப் பணிகள் 2017-ம் ஆண்டுக்கு பிறகுதான் வேகமாக நடைபெற்றன. தற்போது மேம்பாலப் பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்’’ என்றனர்.

இதற்கிடையே, பல்லாவரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு மறைமலை அடிகளின் பெயரை வைக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

அண்மையில் மறைமலை அடிகளின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலைக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது மறைமலை அடிகள்இல்லம் உள்ள தெருவுக்கும் பல்லாவரத்தில் கட்டப்படும் பாலத்துக்கும் அடிகளின் பெயரை வைக்கவேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனஅமைச்சர் தெரிவித்தார். இதேபோல், தமிழ் அறிஞர்கள் பலரும்,பாலத்துக்கு மறைமலை அடிகளின் பெயரை வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அடிகளின் பேரன் மறை.தி.தாயுமானவன் கூறும்போது, ‘‘பல்லாவரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கும் அவர் வசித்த வீடு உள்ள தெருவுக்கும் வைக்க அமைச்சர்மூலம் வேண்டுகோள் வைத்துள்ளோம். மறைமலை அடிகள் இல்லத்தை அரசு ஏற்று நினைவு இல்லமாக்க வேண்டும் எனவும் கோரியுள்ளோம்’’ என்றார்.

கன்னியாகுமரி தொகுதி எச். வசந்தகுமார் (எம்.பி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச். வசந்தகுமார் இன்று, வெள்ளிக்கிழமை, மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை இன்று மோசமடைந்து, இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வசந்தகுமாா் (70), கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். இவரது நோ்முக உதவியாளா் போத்திராஜுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வசந்தகுமாா் எம்.பி., அவரது மனைவி தமிழ்ச்செல்வி (61) ஆகியோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், அவா்கள் இருவருக்கும் கரோனா இருப்பது 10-ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வசந்தகுமாரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது வாழ்க்கையை ஒரு விற்பனையாளராக தொடங்கிய வசந்தகுமார், தொடக்கத்தில் சொந்தமாக ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்தார். பின்னர் 1978-ஆம் ஆண்டு வசந்த் அண்ட் கோ என்ற வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடையைத் தொடங்கினார். தற்போது தமிழகம், புதுச்சேரி என 64 கிளைகளுடன் வசந்த் அன்ட் கோ கிளை பரப்பியுள்ளது.

இரண்டு முறை எம்எல்ஏவாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2016-ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினரானதை அடுத்து, நாங்குநேரி எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார். 

கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும் ?




 
 
கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சராசரியாக 1,000 பேர் உயிரிழக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ‘தடுப்பூசி ஒன்று தான் அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என, மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் நம்பத்தகுந்த வகையில் தயாராகியுள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார், ‘ஜைகோவ் டி’ என்ற தடுப்பூசியை தயாரித்து இருக்கிறார்கள்.

இதேபோல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் கரம் கோர்த்து ஒரு தடுப்பூசியை (கோவிஷீல்டு) உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிப்பதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
கோவேக்சின் மற்றும் ஜைகோவ் டி தடுப்பூசிகளை முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற பரிசோதனை முடிந்துள்ளது. 2வது கட்ட பரிசோதனையும் வெற்றிகரமாக செல்கிறது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா சமீபத்தில் அறிவித்துள்ளார். அதே போல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின், 2, 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தி குறித்து பேசியுள்ள சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவாலா, ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தயாரிப்புக்காக 200 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது தடுப்பூசிகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. முதல்கட்டம் வெற்றி பெற்றதால் தயாரிப்பை தொடங்கியுள்ளோம். ஆனால் அடுத்த கட்டங்களில் தடுப்பூசி சோதனை தோல்வி அடைந்தால், இப்போது தயாரிக்கப்படும் தடுப்பூசி வீணாகிவிடும். இந்த மாதமே மூன்றாம் கட்ட பரிசோதனையும் தொடங்கும். முழுமையாக பரிசோதனை முடிய 3 மாதங்கள் வரை ஆகலாம். நவ., மாதம் பரிசோதனை முடிந்த பிறகு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததும், உடனே தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்’ என்றார்.

மேலும், தடுப்பூசி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் செலுத்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரம் மாதம் 60 மில்லியன் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் 30 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்.

2021ம் ஆண்டு தொடக்கத்தில்…

‘2020ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் தடுப்பூசிகள் பரிசோதனைக் கட்டங்களைக் கடந்து மக்களுக்குச் செலுத்துவதற்கான ஒப்புதல்களைப் பெறும். எனவே, இந்தியா 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும். உலகளாவிய தேவையில் 40 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்யும்’ என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் இரண்டு மருத்துவமனைகளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமசந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்தார்.

 

 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்தார்.

திருவாரூரில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: திருவாரூரில் தற்போது 460 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு தினமும் சராசரியாக 400 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருவாரூரில், அரசின் நடவடிக்கையால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 10,014 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 8,321 சுய உதவிக்குழுக்களில் 93,960 உறுப்பினர்கள் உள்ளனர். சுய உதவி குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.568 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சட்டசபை தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றியும், யார் தலைமையில் கூட்டணி என்பதையும் முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.