நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
திருவாரூரில் 460 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் சராசரியாக 400 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
நடமாடும் மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருவாரூரில், அரசின் நடவடிக்கையால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் 10,014 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. திருவாரூரில் 8321 சுய உதவிக்குழுக்களில் 93960 உறுப்பினர்கள் உள்ளனர். சுய உதவிக்குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.568 கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது என கூறினார்.
திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பி.ஆர்.பாண்டியன், ரங்கநாதன், கிருஷ்ணமணி, சத்யநாராயணன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொணடனர்