ரீசஸ் (Rhesus) வகை குரங்குகள் ஆராய்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வகை குரங்குகள் முற்றிலும் காணாமல் போய்விட்டதாகவும் அவற்றை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பயோக்வால் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். வைரஸ் பரவலால் சோதனைக்காக இந்த வகைக் குரங்குகளின் தேவை அதிகரித்ததோடு சீனாவிலிருந்து வரும் குரங்குகளின் இறக்குமதி எண்ணிக்கையும் குறைந்துவிட்டதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 35,000 குரங்குகளில் 60% சீனாவிலிருந்து வந்தவை. ரீசஸ்(Rhesus) வகை குரங்குகளை எப்போதும் பயோ சேஃப்டி லெவல் 3 எனப்படும் ஆய்வகங்களில் மட்டுமே வைக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் இந்த ஆய்வகங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தற்போது கைவசம் உள்ள குரங்குகளைக் கொரோனா ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.