ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர்: செப்டம்பர் 6-ம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அனுமதி சீட்டை நாளை முதல் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில்(www.tnhrce.gov.in) முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முன் பதிவின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை எனவும் தரிசனத்திற்கான அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நேரங்களில் அதனை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்களுக்கு கடற்கரையில் நீராடவும், நாழி கிணற்றில் தீர்த்தம் தெளித்தல் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்கவும் அனுமதி இல்லை. மதிய அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment