திருவாரூர் - குக்கர் டோக்கன்

 அதிமுகவுக்குச் சவால் விடுக்கும் டி.டி.வி தினகரன்!
 
 திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும்  குக்கர் டோக்கன் உங்களால் என்ன செய்ய முடியும் என அ.தி.மு.கவிற்கு டி.டி.வி தினகரன் சவால்விடுத்துள்ளார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி நதி நீரை வீணாக கடலில் கலக்கவிட்ட அ.தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டார் அப்போது அவர் பேசும்போது,

காவிரி நதிநீர் விணாக கடலில் கலப்பதை பாதுகாக்க தவறிய இந்த அரசால் நம் விவசாயிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் இந்த அரசாங்கம் கண்ணிருந்து பார்வையில்லாத காத்திருந்து கேட்கமுடியாத இந்த அரசாங்கத்திருக்கு எதிராக  நம் தஞ்சை டெல்டா விவசாயிகள் சார்பாக  இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என துவக்கினார்.

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்காக விட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது பொய் பிஜேபி காரர்களுக்காகதான் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் ஆட்சி பழனிசாமி ஆட்சியோ பன்னீர்செல்வம் ஆட்சியோ இல்ல. டெல்லியில் இருந்து வரும் உத்தரவை வைத்து நடைபெறும் ஆட்சி இது. குக்கிராமத்தில் உள்ள அப்பனுக்கும் குப்பனுக்குமே தெரியும். என்னை மிரட்டிதான் ராஜினாம கடிதம் வாஙங்குனாங்கனு பன்னீர்செல்வம் சொல்ட்றது வைச்சே அவரோட குணாதிசியம் எப்படினு பாத்துகோங்க ஒரு முதலமைச்சரா பெரிய பதவில இருக்கும்போது நான் எப்படி அவர மிரட்டி கையெழுத்து வாங்ககமுடியும்" என்றார். 
மேலும் தொடர்ந்து பேசிய தினகரன், ``ஆர்.கே நகர் தொகுதியில் நாங்க டோக்கன் கொடுத்துதான் வெற்றிபெற்றோம் 

எங்கமீது பழி சுமத்தி வழக்கும் போட்டீர்கள். ஆனால் கோர்டே சொல்லிவிட்டது  நாங்க டோக்கன் கொடுத்ததற்கும், பணம் கொடுத்தற்கும் ஆதாரம் இல்லையென்று. திருப்பறங்குன்றத்துலயும், திருவாரூர்லயும் வரும் இடைத்தேர்தலுகாக ஏற்கனவே டோக்கன் கொடுத்துட்டோம் மக்கள் எல்லாரும் தயாரா இருகாங்க குக்கர் என்கிற டோக்கன் கொடுத்திருக்கோம். தேர்தலில் சந்திப்போம். ஆனால் அதற்கு முன்னாடியே இந்த ஆட்சி போய்விடும் என்று நினைக்கிறேன்" எனக்கூறி கண்டன ஆர்பாட்டத்தை நிறைவு செய்தார்.