மும்தாஜ் செய்யும் அட்ஜஸ்ட்


பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மும்தாஜ் என்றதும் அவரும் அனைவர் மீதும் அன்பாக இருப்பார் என்று சொல்லும்படி நடந்து கொள்கிறார். மேரி பேட்டி, பேட்டா, பச்சா என்று பாச மழை பொழிவார். ஐஸ்வர்யா மீது தற்போது அவருக்கு கூடுதல் பாசம் ஏற்பட்டுள்ளது. மும்தாஜ் பிக் பாஸின் மனம் அறிந்து நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐஸ்வர்யா இத்தனை வாரங்களாக நாமினேட் ஆகாமல் இருந்ததற்கு பிக் பாஸ் தான் காரணம் என்பதை மும்தாஜ் புரிந்து கொண்டுள்ளார். அதனாலோ என்னவோ கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மீது தனிப் பாசம் வைத்துள்ளார். சில சமயங்களில் ஐஸ்வர்யா மும்தாஜை விரட்டிவிட்டாலும் பின்னர் அவரிடம் தானாகப் போய் பேசுகிறார்.

ஐஸ்வர்யா செய்யும் பல விஷயங்கள் மும்தாஜுக்கு பிடிக்கவில்லை. இருப்பினும் சகித்துக் கொண்டு அவரிடம் போய் பேசுகிறார், பாசம் காட்டுகிறார். ஒரு வேளை பிக் பாஸ் தான் மும்தாஜை ஐஸ்வர்யாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருப்பாரோ? அதனால் தான் மும்தாஜ் ஐஸ்வர்யா மீது கோபம் ஏற்பட்டாலும் காட்டுவது இல்லையோ?. பிக் பாஸ் மனதை குளிர வைக்க அட்ஜஸ்ட் செய்கிறாரா மும்தாஜ்